காதும் கண்களும் கூர்மையாக வேலை செய்யவில்லை

மாணவர்களால் எதையும் சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு முழு முதல் காரணம் அவர்களுக்குத் தங்கள்  முன்னேற்றத்தில் அக்கறை இல்லை என்றும், கேட்பதிலும் கவனிப்பதிலும் அக்கறை இல்லை என்றும், காதும் கண்களும் கூர்மையாக வேலை செய்யவில்லை என்றும் பொருள். வகுப்புக்கு வரும் முன்பு மேற்கூறிய மூன்றையும் தயார் செய்து கொண்டு வாருங்கள் !! 


கேள்விகளுக்கு நீங்கள் புத்தகத்தை பார்க்காமல்தான் பதில் கூற வேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்பதில்லை !! பத்து வயது பிள்ளையின் கையெழுத்து எங்களுக்கு தெரியாதா? மூக்குக்கு மேல மச்சம் ஒட்டி மாறுவேடத்தில் வரும் எம்ஜிஆரை கண்டுபிடிக்க தெரியாத நம்பியாரா நாங்க?


ஆன்லைன் வகுப்பு நடக்கும் போது, கேள்விக்கு பதில் தர வேண்டி உங்கள் பெயரைக் கூப்பிடும் போது, உடனே "yes sir" என்று மறு மொழி / எதிர்வுணர்வு / பதில் குரல் வராவிட்டால், 

நீங்கள் வகுப்பை attend செய்யவில்லை அல்லது வேறு எங்கோ சென்று விட்டீர்கள் அல்லது தூங்கி விட்டீர்கள் அல்லது டிவி பார்க்கிறீர்கள் அல்லது விளையாடுகிறீர்கள் என தான் அர்த்தம் கொள்ள நேரிடும்; இருமுறை உங்கள் பெயரை கூப்பிட முடியாது !!




  1. சட்டை அணிந்து கொண்டு வீடியோ ஆன் செய்யுங்கள்.
  2. வகுப்பறையில் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்வீர்களாே அதைப் போல் நடந்து கொள்ள முயற்சியுங்கள். 
  3. ஆசிரியருக்கு தெரியாது என்பதற்காக தம்பி தங்கைகளிடம் நோட்டு எழுதித் தர சொல்லி கொடுமை செய்யக் கூடாது. 
  4. பாடத்தை கவனியுங்கள். வீடியோ ஆடியோவை mute செய்துவிட்டு ஊர் சுற்றவோ படம் பார்க்கவோ கிளம்பாதீர்கள். 
  5. பள்ளிக்கு சென்றிருந்தால் நோட்டில் எதுவும் இல்லாவிட்டாலும் நோட்டு மட்டுமாவது இருக்கும். இங்கே அதையாவது செய்யலாம். பள்ளியில் இருப்பது போல் உங்களிடம் நோட்டு இல்லாவிட்டாலும் நண்பரிடம் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். நண்பர்கள் வீட்டுக்கு சென்றும் படிக்கும் வசதி அனைவருக்கும் இல்லை. அவர்களுடைய நோட்டை புகைப்படம் எடுத்து அனுப்பினாலும் உங்களால் நீண்ட நேரம் அதைப் பார்த்து படிக்க இயலாது. 
  6. வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது பாடல்கள் ஒலிபரப்புவது வீடியோ ஒளிபரப்புவதெல்லாம் வேண்டாம். உங்களை சன் மியூசிக்கிற்கு substitute ஆக அழைக்கவில்லை. கேட்கவேண்டும் என்றால் தனியாக வேறெங்காவது போய் கேட்டுக்கொள்ளுங்கள். 
  7. நோட்டில் கிறுக்கவதைப்போல் வைட்போர்டில் கிறுக்கவேண்டாம். 
  8. PDF or PPT தானே பாேடுகிறார்கள்,... கடைசியில் நாமே படித்துக்கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். நிஜமாக ஒன்றுமே புரியாது.