Latest tips ... சந்தித்து காலமெல்லாம் வருந்துவர்

📢📢 📢📢
We want you all to study English and Social Science and Maths seriously with extra hardwork, if you like to join any job in government after +2

💥Attendance to our online classes are marked and score is assigned for attendance. Students who score less marks will lose some benefits from this group; Your attendance is important to us. We use attendance record to delete your name from Nilassoru group and https://gseva.org

💥Whenever you reply or write an answer, check your answer is in a sentence and the sentence contains a subject and a verb and an object
e.g. Police told public "go away"

For verb , use correct tense.
Past ; Present ; Future..
Police : subject (noun)

Told : verb
Public : object (noun)

💥 கவனிக்கவும்::
மற்ற பாடங்களைப் பற்றி இன்னும் தெரியவில்லை.
ஆனால் ஆங்கிலத்தைப் பொருத்தவரை பாடங்களை புரிந்து கொள்ள குறைந்தது 60 வகுப்பிற்கு மேல் தேவை.
அவ்வளவு நாள் நம்மிடம் இல்லை.
ஆகவே பாடங்களை வேகமாக நடத்தியே ஆகவேண்டும்.
நான் வேகமாக நடத்தினேன் என்ற எண்ணம் உங்களுக்கு வராமல் இருக்க மிகமிக ஆழ்ந்து கவனிப்பதும் ஒரு வகுப்பு கூட தவறாமல் வருவதும் தான் உங்கள் கடமை


💥ஒரு திறமையான மாணவர் காலை முதல் இரவு வரை தனது நேரத்தை எப்படி செலவு செய்வார்?
(குறிப்பாக ராஜலட்சுமி நகர் கார்ப். பள்ளியில் படிப்பவர்கள்)...

பள்ளி நேரம் + தூங்கும் நேரம் போக மீதி உள்ள நேரத்தில் :
மொத்த நேரம் 11 மணித்துளிகள்.

ஒரு மணி நேரம் : வீட்டுவேலை (அப்பா அம்மாவிற்கு உதவி)

ஒரு மணி நேரம்: குளிக்க கொள்ள ஆகியவை.

ஒரு மணி நேரம் சாப்பிட+ ஓய்வு எடுக்க.

ஒரு மணி நேரம்: வெளியில் ஏதாவது வேலை இருந்தால் செய்ய அல்லது நண்பனை சந்திக்க.

எட்டு மணி நேரம் படிக்க.

மீதி ஒரு மணி நேரம் பொழுது போக்க.

"காலநேரத்தின் பெருமையை உணர்ந்தோர் பகலில் ஓய்வின்றி இருப்பர் ; 
உணராதோர் அதன் இழப்பை மட்டும் சந்தித்து காலமெல்லாம் வருந்துவர்". 

💥ஆசிரியர்கள் எவ்வளவு நிறைவாக நடத்தினாலும் அதை தேர்வில் செயலிடுவது  மாணவர்களின்  திறமைதான். அதற்கு கடும் உழைப்பு தேவை. அந்த கடும் உழைப்பு,  தேர்வு நாள் / தேர்வு வார காலங்களில் மட்டும் தீடீரென குவிந்து விடாது. தினமும் ஒவ்வொரு பாடமும் ஒரு மணி நேரம் வீட்டில் படித்தால் மட்டுமே நிச்சயமான எதிர்காலம் வளரும்.

💥 " நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு  சமமாக கிராமத்தில்  நவீன  வசதிகள் பெற்று, கிராமத்திலேயே  வளமாக இருப்போம், அல்லது நகரம் சென்றாலும் கெடாமல் இருப்போம் "