Master Key to riches. Book by Napoleon Hill
செல்வத்தின் முதன்மை திறவுகோல் (சாவி) எனும் புத்தகத்தில் நெப்போலியன் ஹில் என்னும் புகழ் மிக்க எழுத்தாளர் என்ன சொல்கிறார் ? அறிவு திறமை உழைப்பு செல்வம் ஆகிய அனைத்திலுமே நாம் எப்படி பணக்காரர் ஆக இருப்பது என்பது தான்.
இதில் முதல் உண்மை ஒவ்வொரு முன்னேறிய மனிதனும் தானாக தன்னால் மட்டுமே முன்னேறவில்லை ; வேறு ஒருவரின் மிகச்சிறிய உதவி கூட இல்லாமல் எவராலும் முன்னேற முடியாது என்பதே. மேலே உள்ள படத்தைப் பாருங்கள். அவை எல்லாம் உதவி கேட்பவர் அல்லது தருபவர் ஆகியோரது படம்தான். ஒரு தேசமே செல்வமாக இருக்கும் என்பதற்கு ஆதாரமே இந்த உதவிதான்.

ஒரு யோசனை புதியதாக உதிக்கும்போது அதை செயல்படுத்த உதவி தேவைப்படுகிறது. யோசனை புதியதாக இருக்கும்போது அதற்கு மக்கள் ஆதரவு எளிதில் கிடைக்காது. உலகில் உண்டான கண்டுபிடிப்புகள் யாவும் அவ்வளவு எளிதில் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதே கசப்பான உண்மை.
சாமுவேல் மோர்ஸ்-ம் மார்க்கோனி-யும் தந்தியை (telegram) 1837 மற்றும் 1901 ம் வருடம் கண்டு பிடித்து காண்பித்த போது மக்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால் அதன் பின் சுமார் 100 வருடங்களுக்கு அது பயன்பாட்டில் இருந்தது, இ-மெயில் வரும் வரை !!
அதன் பிறகு தாமஸ் அல்வா எடிசன் மின் விளக்கை கண்டு பிடித்தபோதும் ரைட் பிரதர்ஸ் விமானத்தை கண்டு பிடித்த போதும் உலகம் அவ்வளவு எளிதில் ஏற்கவில்லை.
அதுபோலவே, இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் புதியதாக சொல்லி உள்ளார்கள், அதை எல்லோரும் ஏற்பார்களா என்பதை என அடுத்த கட்டுரையில் படிப்போம். (தொடரும்).