வீட்டுக்குச் சென்ற வகுப்பறை
பள்ளியை வீடுகளுக்கு கொண்டு செல்வது
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு வலுவான உணர்ச்சிப் பிணைப்பு உள்ளது. ஆசிரியர் மற்றும் குழந்தைகள், குறிப்பாக கிராமப்புறங்களில், ஆசிரியர் ஒரு கல்வியாளராக மட்டுமல்ல, ஒரு ஆலோசகர், சமூக சேவகர், நண்பர் மற்றும் proxy ஆகக் கூட செயல் படுகிறார்கள். ஒரு நல்ல ஆசிரியர் சமூகத்தில் ஒரு பெரியவர். சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் மரியாதைக்குரிய நபர். ஒரு கிராமத்தின் வீடுகளுக்குச் செல்ல அவருக்கு அனுமதி தேவையில்லை; மற்றும் மாணவர் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடலைத் தொடங்குவார் .
மகாராஷ்டிராவில் , இந்தக் குடும்பப் பிணைப்புகளைப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் பள்ளிச் செயல்பாடுகளை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார். குறிப்பிட்ட பிரதேசத்திலும் அந்த சமூகத்திலும், இன்னும் பள்ளிக் கல்வி கட்டாய தேவை என்றே உணரவில்லை. ஆகையால் பள்ளி-சாரா, முறை சாரா கல்வியை ஆசிரியர்கள் தாம் கொண்டு செல்ல வேண்டும் என உணர்ந்தனர். பயிற்சிக்காக அவர்களே தாள்களை பிரிண்ட் செய்தனர். வாரம் மூன்று முறை மாணவர்களை பொதுவான (பண்ணை போன்ற) இடத்தில் கூட்டினார்கள். நீண்ட தூரம் நடந்தாலும் மாணவர்கள் கீழ்ப்படிவதில் மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு ஆசிரியர் சில லேமினேட் தாள்களை எடுத்துச் சென்று உபயோகித்து , அழித்து துடைத்து மீண்டும் பயன்படுத்த முடியுமாறு செய்தார்கள். இன்னொரு ஆசிரியர் வீட்டில் கிடந்த ஓடுகளை எடுத்து வந்து கொடுத்து அந்த ஓட்டின் மேல் எழுதுமாறு பழக்கினார். ஒரு ஆசிரியர் செல்லும் இடம் எல்லாம், வகுப்பறையில் உள்ள கரும் பலகை போல பேனாவில் எழுதும் ஒயிட் போர்ட் கொண்டு சென்று மரத்தின் கீழ் வைத்து வகுப்பு எடுத்தார். வேறு ஒரு ஆசிரியர் பயிற்சி தாள்களை ஜெராக்ஸ் எடுத்து வீட்டின் கதவில் அதை ஒட்டிவிட்டு (வீட்டு கதவையே கரும்பலகை ஆக்கிவிட்டு) செல்ல அடுத்த முறை வரும்போது கேள்விகள் கேட்பார். இந்த மாதிரி ஆசிரியர்களின் புத்திசாலித்தனமான முயற்சிகளால் (ஆசிரியர்களின் உயர் அதிகாரிகளின் தொந்திரவு இருந்தாலும் ) கிராமங்களில் கல்வி தடை படாமல் தப்பித்தது. அவர்கள் சுலபமாக வேலை செய்யாமல், பள்ளி மூடிவிட்டது, மாணவர்கள் வரவில்லை, வேலைக்குப் போய் விட்டார்கள், ஆர்வம் இல்லை, அவர்கள் வீட்டிற்கு சென்று பாடம் சொல்லித் தர பஸ் வசதி இல்லை என தப்பித்துக் கொள்ள காரணங்கள் இருந்தும், ஆசிரியர்கள் அவ்வாறு செய்யவில்லை.
(இந்த கட்டுரை ஆங்கிலத்தில் Online Learning | Reality in the Hinterlands என்ற தலைப்பில் Rammohan Khanapurkar என்ற லண்டன் ஆராய்ச்சியாளர் எழுதியது)
💥" நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு சமமாக கிராமத்தில் நவீன வசதிகள் பெற்று, கிராமத்திலேயே வளமாக இருப்போம், அல்லது பட்டணம் சென்றாலும் கெடாமல் இருப்போம் "