g Seva கிராம சேவா (நிலாச்சோறு)

நிலாச்சோறு : கிராம பள்ளி மாணவர்களுக்கு கல்விப் பாட உதவி:

இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகளுக்கு இடையேயான  எழுத்தறிவு இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வியை விரிவுபடுத்தி நாம் அந்த இடைவெளியைக்  கட்டுப்படுத்தலாம். இந்த  டிஜிட்டல் நன்மையின் காரணமாக, கல்வித் திறன், குணநலன் உருவாக்கம், பொறுப்பான குடியுரிமை, சமூக நீதி, சுற்றுச்சூழல் உணர்திறன், மற்றும் பலவற்றை கிராமப்புற மாணவர்களிடம் வளர்க்க முடியும். நமது நோக்கம்  கீழ்க்கண்ட அரசு சாரா அமைப்புகளை  ஒத்து இருக்கின்றன : 

The literacy gap between rural and urban schools in India continues to widen. We can bridge that gap by expanding integrated education for all through the use of technology. Because of this digital advantage, rural students can develop academic skills, character development, responsible citizenship, social justice, environmental sensitivity, and more. Our purpose is to conform to the following NGOs:




உங்களுக்கு புரிகிறதா, நாங்கள் ஏன் உங்களுக்கு டிஜிட்டல் வகுப்பறையை உங்கள் வீட்டிற்கே கொண்டு வருகிறோம் என்று ? இந்த படங்களில் உள்ள வார்த்தைகளை படித்து ஒரு நிமிடம் அதைப் பற்றி சிந்தனை செய்யுங்கள்.. 

இலவச படிப்பு உங்களுக்கு அரசாங்கம் தருகிறது. ஆனால் நல்ல குணங்கள், பழக்க வழக்கங்கள், நியாயம், திறமைகள் ஆகியன உங்கள் பள்ளி வழியாக இந்த காலத்தில் வர வாய்ப்பு இல்லை. 
அந்த இடத்தை நிரப்பவே இந்த நிலாசோறு மூலம் நாங்கள் அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.


இந்த வருடம், இந்த டிஜிட்டல் வகுப்பில் சில மாற்றங்களை கொண்டு வருகிறோம்.  (காண்க: https://nilassoru.gseva.org/2022/01/blog-post_20.html )
  • 6, 7, 8, 9 ம் வகுப்புகளுக்கு கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மட்டுமே நிலாசோறு வகுப்பில் நடக்கும். 
  • பாடங்களின் முக்கிய பகுதிகள் மட்டுமே ஆடியோ,வீடியோ மூலம் நடத்தப்படும். மொத்த பாடம் அல்ல. ஆனால் குறிப்பாக விளக்கம் வேண்டும் எனில், தனியாக நேரம் ஒதுக்கி நீங்கள் கேட்கலாம். 
  • வார முதலில் நடக்கும் பாலவிகாஸ், மற்றும் மனம் & அறிவு மேம்பாடு பயிற்சி  ஆகிய இரண்டு வகுப்புக்களில் கலந்து கொண்டால் மட்டுமே மற்ற பாட வகுப்பிற்கு அனுமதி தரப்படும். ஒவ்வொரு வாரமும் இதுவே முறை. 
  • ஆண் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் தினம் தினம் மாலை டிஜிட்டல் வீடியோ பெரிய திரை வழியே பாடம் நடத்தப்படும். வகுப்பின் இடையே டீ வழங்கப் படும். பெண் பிள்ளைகள் அதே வகுப்பை  தங்களது  மொபைல் வழியே அவர்கள் வீட்டில் இருந்தே பாடம் கற்கலாம். 
  • மேற்கொண்ட முறையில் கற்க வசதிப் படாதவர்கள் மாதம் ரூ 200 செலுத்தி சாம்சங் (அ) லெனோவா டேப்லெட் எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதே வகுப்பை டேப்லெட் வழியாக வீட்டில் இருந்தும் கற்கலாம். 36 மாதங்கள் ரூ 200 வீதம் டேப்லெட் க்கு (ரூ 7200) செலுத்தி இறுதியில் நீங்களே  அதை எடுத்துக் கொள்ளலாம். டேப்லெட் இன் முழு விலை ரூ 11000 நீங்கள் தர வேண்டிய தில்லை. இந்த வசதியை சம்பந்தப் பட்ட பள்ளி ஆசிரியர் அல்லது கிராம ஒருங்கிணைப்பாளர் உறுதி செய்ய வேண்டும். 
  • This year, we are bringing some changes to this digital classroom. (See: https://nilassoru.gseva.org/2022/01/blog-post_20.html)

  • For 6th, 7th, 8th and 9th classes only Mathematics, Science, Geography, History and English will be taught in Nilasoru class.
  • Only the main parts of the lessons will be conducted through audio and video. Not the whole lesson. But especially if you need explanation, you can set aside time alone and ask.
  • Admission to the other course will be allowed only if you attend two classes, Balavikas, which take place on the first of the week, and Mind & Knowledge Development Training. This is the pattern every week.
  • The lesson will be conducted via digital video big screen every evening at a specific location for male children. Tea will be served between classes. Girls can learn the same class from their home via their mobile.
  • Those who are not able to learn the above method can get a Samsung (a) Lenovo tablet from us for Rs. 200 per month and learn the same class at home via tablet. You can pay Rs 200 for a tablet (Rs 7200) for 36 months and eventually pick it up yourself. You do not have to pay the full price of the tablet Rs 11000. This facility should be ensured by the concerned school teacher or village coordinator.
  • 👆 To view hidden menus in the page, click on mark on page top (or) Go to Prev / Home page
  • "We will have advanced facilities in the village equal to the students living in the city, we will be prosperous in the village itself, or we will not be spoiled even if we go to town"
  • 👆 To view hidden menus in the page, click on mark on page top  (or) Go to Prev/Home page
" நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு சமமாக கிராமத்தில் முன்னேறிய வசதிகள் பெறுவோம், கிராமத்திலேயே வளமாக இருப்போம், அல்லது பட்டணம் சென்றாலும் கெடாமல் இருப்போம் "